இந்தியா

புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பைபாஸ் பணியை விரைவாக முடிக்கப்படுமா?

Added : ஜன 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கிடப்பில் உள்ள புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பைபாஸ் பணியை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனுாரில் இருந்து புதுச்சேரி இந்திரா சிக்னல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் மூடி, திறந்தால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்டப்பட்டது.மேலும்

புதுச்சேரி : கிடப்பில் உள்ள புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பைபாஸ் பணியை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனுாரில் இருந்து புதுச்சேரி இந்திரா சிக்னல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் மூடி, திறந்தால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்டப்பட்டது.மேலும் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருந்து மணவெளி, தக்க குட்டை, ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை மேம்பாலத்தில் இணையும் வகையில் 4.2 கி.மீ., துாரத்திற்கு 'பைபாஸ்' அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக முதலியார்பேட்டை நுாறடிச்சாலை மேம்பாலம் அமைக்கும் போதே, விழுப்புரம் புறவழிச்சாலை மார்க்கமாக இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. புறவழிச் சாலைக்காக நுாறடிச்சாலை இணைப்பு பாலத்தில் இருந்து ஜான்பால் நகர் வழியாக 3 கி.மீ., துாரத்திற்கு செம்மண் கொட்டப்பட்டது. தார் சாலை அமைக்கவில்லை.அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில் இருந்து ஒத்தவாடை வீதி வரை சாலை அமைத்துள்ளனர். மீதமுள்ள 500 மீட்டர் துாரத்திற்கு செம்மண் கூட கொட்டவில்லை.

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலைக்கு அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு, அரசு நிர்ணயித்த இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை. இழப்பீடு கேட்டு, நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனால், புறவழிச்சாலை பணி கிடப்பில் போனது.நில உரிமையாளர்கள் கூறுகையில்; மேம்பாலத்திற்கு ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கே இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. புறவழிச்சாலைக்கு, கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீடு ஒருவருக்கு கூட அரசு வழங்கவில்லை. அரசு நிர்ணயித்த இழப்பீடு தொகையை கொடுத்த பிறகு நிலத்தை எடுத்து கொள்ள கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X