அரவக்குறிச்சி: திருச்சி சரக காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பது குறித்து, 'கேடயம்' எனும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, அரவக்குறிச்சியில் நடந்தது. சிறுவர் மீதான பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், சிறுவர் கொத்தடிமை மற்றும் பிச்சை எடுத்தல், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், பெண் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, பாதுகாப்பான வன்முறையற்ற சமுதாயம் உருவாக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி, கலைக் குழுவினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும்,பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட, 93845 01999, 63830 71800 என்ற இரு எண்களை அறிமுகப்படுத்தினர். அரவக்குறிச்சி எஸ்.ஐ.,சரவணன், கேடயம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE