பொது செய்தி

தமிழ்நாடு

13ல் சேவல் கட்டு போட்டி தொடக்கம்: பூலாம்வலசில் ஏற்பாடுகள் மும்முரம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு கிராமத்தில், பொங்கல் பண்டிகைக்கு நடைபெறும் சேவல் கட்டு போட்டியை எதிர்நோக்கி, சுற்றுவட்டார கிராமத்தினர் எதிர்பார்ப்பு டன் காத்திருக்கின்றனர்.அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமம் உள்ளது. இங்கு, பொதுமக்கள் சார்பில், தை பொங்கல் பண்டிகை தினத்தில், அரசின் அனுமதி பெற்று மூன்று நாட்கள் சேவல் கட்டு போட்டி நடத்தப்படுவது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு கிராமத்தில், பொங்கல் பண்டிகைக்கு நடைபெறும் சேவல் கட்டு போட்டியை எதிர்நோக்கி, சுற்றுவட்டார கிராமத்தினர் எதிர்பார்ப்பு டன் காத்திருக்கின்றனர்.


அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமம் உள்ளது. இங்கு, பொதுமக்கள் சார்பில், தை பொங்கல் பண்டிகை தினத்தில், அரசின் அனுமதி பெற்று மூன்று நாட்கள் சேவல் கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த, 100ஆண்டுகளுக்கும் மேலாக போட்டி நடந்து வருகிறது. இந்த, சேவல் சண்டை போட்டிக்காக, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், தனி கவனத்துடன் சண்டை சேவல்களை வளர்த்து வருகின்றனர். இதுபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் சேவல் பிரியர்களால் வளர்க்கப்படும் சண்டை சேவலுடன் போட்டிக்காக பூலாம்வலசு வருவது தொடர்ந்து வருகிறது. அப்போது, தினமும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இந்நிலையில், இந்த ஆண்டு, வரும், 13, 14, 15 தேதிகளில் சேவல் கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளன. அனைத்து ஏற்பாடுகளையும் கிராம மக்கள் முனைப்புடன் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பூலாம்வலசு சேவல் சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் தாங்கள் வளர்க்கும், சண்டை சேவல்களுடன் வந்து கலந்து கொள்வர். அச்சமயத்தில் ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரம் வெகுவாக நடைபெறும். பொங்கல் பண்டிகையன்று எங்கள் பகுதி விழாக்கோலமாக அமர்க்களப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X