பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் தொடரும் சாரல் மழை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கரூர்: வளிமண்டல சுழற்சி காரணமாக, கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 3.2, அரவக்குறிச்சி, 7, கிருஷ்ணராயபுரம், 1.2, மாயனூர், 2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.12 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்று காலையில் இருந்து, கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம்,

கரூர்: வளிமண்டல சுழற்சி காரணமாக, கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 3.2, அரவக்குறிச்சி, 7, கிருஷ்ணராயபுரம், 1.2, மாயனூர், 2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.12 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்று காலையில் இருந்து, கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம், வெள்ளியணை, திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,321 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஆற்றில், 1,300 கன அடி திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 2 மி.மீ., மழை பெய்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 7,217 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு காவிரியாற்றில், 6,697 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிரவரப்படி நீர்வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.17 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X