கரூர் கரூர் அருகே அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில், புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கரூர்-சேலம் பழைய சாலை வெண்ணைமலை பகுதியில், கரூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மற்றும் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய கோவில் உள்ளது. கடந்த, 2011-16ல் அந்த பகுதியில் வேலை வாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நலத்துறை அலுவலகம் மற்றும் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்கள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த பகுதியில் பல ஆண்டுகளாக மண் சாலையே இருந்தது. இதனால், மழைக்காலத்தில் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட, அரசு துறை அலுவலகங்களுக்கு செல்கிறவர்கள் பெரும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE