புதுச்சேரி : அமைச்சர் கந்தசாமியை கூடிய விரைவில் சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கப்படும் என கவர்னர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து கவர்னர் மாளிகை செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நலத்துறை அமைச்சர் தான் வகிக்கும் துறையின் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க கவர்னரிடம் நேரம் கேட்டு இருந்தார்.இது தொடர்பாக அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் அனுப்பிய பதில் கடிதத்தில், அமைச்சர் கூறியிருந்த விஷயங்கள் சம்பந்தமாக உரிய நிர்வாக செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதை விவாதிப்பதற்கான தேதியும், நேரமும் தெரிவிக் கப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE