கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: தமிழக மக்கள் மற்றும் கரூர் மாவட்ட மக்கள், தமிழ் கலாசாரத்தை யார் அவமானப்படுத்துகின்றனரோ, அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக மக்கள் மீது, பிரதமர் மோடி அதிக பாசம் வைத்துள்ளார். இதனால், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் பற்றி பிரதமர் அதிகம் பேசி வருகிறார். நாமும், 'தி.மு.க., கோபேக்' '2ஜி கோபேக்' என, சொல்லலாம். சீன அதிபரை மாமல்லபுரத்துக்கு பிரதமர் அழைத்து சென்றார். பிரதமர் சார்பில், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகா மாநிலத்தில், எடியூரப்பா முதல்வர் ஆன பிறகே, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தால், காவிரி தண்ணீர் பிரச்னையில் தீர்வு காண வழி ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கரூரில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பெண்களை, தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்கு வரும் சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பதிலடி கொடுப்பர். அவருடைய மகன் மாற்று கட்சியை சேர்ந்த பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார். தமிழர்களின் வீடுகளில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. 250 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து, கூட்டிய கிராம சபை கூட்டம் இது இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE