நாகப்பட்டினம் : நாகூர் தர்கா கந்துாரி விழாவையொட்டி, நேற்று அதிகாலை தர்காவின் அனைத்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.
நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில், 464ம் ஆண்டு கந்துாரி விழா, வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 23ம் தேதி இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 24ம் தேதி அதிகாலை நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவின் 5 மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE