வில்லியனுார் : வில்லியனுார் ஒதியம்பட்டு அடுத்த தமிழக பகுதியான சந்திக்குப்பத்தில் உள்ள மகான் சற்குரு நவபாஷானர் சித்தர் பீடத்தில் வரும் 16ம் தேதி குரு பூஜை விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு அன்று காலை 6:45 மணிக்கு கோ பூஜை, 7:15 மணிக்கு சங்கராபரணி ஆற்றில் இருந்து கலசநீர் கொண்டுவருதல், தொடர்ந்து மகா கணபதி ேஹாமம் நடக்கிறது.காலை 9:00 சற்குரு நவபாஷான சித்தர் ஜீவ பீடத்தில் அபிேஷகமும், 108 சங்கு அபிேஷகமும், காலை 10:00 மணிக்கு புனித கலசநீர் புறப்பாடும், 11:30 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை மகான் சற்குரு நவபாஷான சித்தர் பீட நிர்வாகக் குழுவினர் மற்றும் சந்திக்குப்பம் கிராம மக்கள் செய்த வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE