இந்தியா

புதுச்சேரியில் தான் அரசியல் செய்வேன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திட்டவட்டம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஆந்திரா அரசியலுக்கு செல்ல மாட்டேன் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, காங்., கூட்டணி கட்சியின் 3ம் நாள் தர்ணா போராட்டத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது;என் மீது 42 வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு கவர்னர் புகார் அனுப்பியுள்ளார். என் மீது எந்த ஊழல் இருந்தாலும், வழக்கு போடுங்கள் என சவால் விடுகிறேன்.

புதுச்சேரி : ஆந்திரா அரசியலுக்கு செல்ல மாட்டேன் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, காங்., கூட்டணி கட்சியின் 3ம் நாள் தர்ணா போராட்டத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது;என் மீது 42 வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு கவர்னர் புகார் அனுப்பியுள்ளார். என் மீது எந்த ஊழல் இருந்தாலும், வழக்கு போடுங்கள் என சவால் விடுகிறேன். கொரோனா காலத்தில் 30 சதவீத செலவீனத்தை குறைத்துள்ளேன். ஆனால் கவர்னர் குறைக்கவில்லை.மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என முதல்வர் நாராயணசாமி அழுதுவிட்டார்.

மக்களுக்காக அரசியல்வாதிகள் பாடுபட்டு வருகின்றனர். தேர்தலின்போதுபிரியாணி, மதுபாட்டில் கொடுத்தது கிடையாது. அந்த வகையில் நான் ஒரு கம்யூனிஸ்ட்.எதிர்காலத்தில் நான், என் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மாட்டோம். கவர்னர் கிரண்பேடி தேர்தலில் நின்றால், நான் நிற்பேன். ஏனாமில் மட்டுமில்லை எங்கு நின்றாலும் வெற்றி பெறுவேன்.நான், ஆந்திரா அரசியலுக்கு செல்ல இருப்பதாக பலர் கூறுகின்றனர். ஆந்திரா செல்ல மாட்டேன். புதுச்சேரியில் தான் அரசியல் செய்வேன்.இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X