புதுச்சேரி : இந்திய கம்யூ., முதலியார்பேட்டை தொகுதி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு நடந்தது.
முதலியார்பேட்டை சுப்பையா இல்லத்தில் நடந்த மாநாட்டிற்கு தொகுதிக் குழு செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர்கள் அபிேஷகம், கீதநாதன், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா,சேதுசெல்வம் வாழ்த்தி பேசினர்.மாநாட்டில், கந்தலாக உள்ள முதலியார்பேட்டை-கடலுார் சாலையை போர்க்கால அடிப்படையில் அரசு சரி செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை மாற்ற வேண்டும். தினமும் குப்பையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE