நாமக்கல்: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், நாமக்கல்லில் பதவியேற்பு மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. அகில இந்திய இணைச்செயலாளர் செல்வ கபில தலைமை வகித்தார். மாநில தலைவர் கீர்த்திவாசன் பேசினார். ஆலய ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கருணை தொகையாக, 1,000 ரூபாய்; அர்ச்சகர்களுக்கு, 3,000 ரூபாயாக ஓய்வூதியத்தை உயர்த்தி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆலய வழிபாடு உற்சவ விஷயங்களில், அடுத்து வரும் காலங்களில் அந்தந்த கோவில் அர்ச்சகர்களை கலந்து முடிவு செய்ய, அரசு ஆவண செய்ய வேண்டும். ஆலய வழிபாட்டில் பூஜை விதிமுறைகளில், கோவில் பழக்க வழக்கங்களை மாற்றாது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து சிவாச்சாரியார்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட தலைவராக பழனிசாமி, செயலாளராக திருஞானசம்பந்தம், பொருளாளராக சுந்தரேச ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE