ப.வேலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப.வேலூர் வட்டாரத்தில் வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ப.வேலூர் தாலுகா சோழசிராமணி, ஜமின் இளம்பள்ளி, ஜேடர்பாளையம், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், அண்ணாநகர் மற்றும் பொன்மலர்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், விளையும் கரும்புகள், ப.வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, 700க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அச்சு வெல்லம், குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்லங்களை, 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டப்பட்டு, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், சர்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் முக்கிய பங்கு வகிப்பது பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு வெல்லம், நாட்டு சர்க்கரை முக்கிய பங்கு வகிப்பதால், வெல்ல காய்ச்சும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE