ராசிபுரம்: பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் சில நாட்களே உள்ளதால், ராசிபுரம் பகுதியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின. ராசிபுரம் நகராட்சியில் மார்க்கெட் பகுதியில் அதிக இறைச்சி கடைகள் உள்ளன. அதுமட்டுமின்றி காட்டூர் சாலை, பட்டணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கடைகள் உள்ளன. நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் சாலையோரம் அதிக இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், வரும், 13ல் பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. இதனால், கிராமங்களில் கடந்த வாரம் முதல் வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடித்து விட்டனர். இதனால், நேற்று யாரும் அசைவம் சமைக்கவில்லை. எனவே, இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய கடைகள் பெரும்பாலும் திறக்கவில்லை. திறந்த கடைகளும் வியாபாரம் குறைவாக இருந்ததால், காலை, 10:00 மணிக்கு மூடிவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE