பள்ளிபாளையம்: அன்னை சத்யா ஓடையில், தடுப்பணை இல்லாததால் நான்கு மாதங்களாக தண்ணீர் வீணாகிறது. பள்ளிபாளையம் அருகே, அன்னை சத்யா நகரில் ஓடை செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தால் இதில் அதிகளவு தண்ணீர் செல்லும். வாய்க்காலின் உபரி நீரும் செல்லும். கடந்த நான்கு மாதங்களாக தண்ணீர் இதில் செல்கிறது. ஓடையில் தண்ணீரை சேமிக்க, தடுப்பணை இல்லை. வீணாகும் தண்ணீரை சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இப்பகுதி குடியிருப்புகள் நிறைந்தவை என்பதால், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படாது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இனிமேல் தண்ணீர் சேமிக்கும் வகையில் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE