வாஷிங்டன் : 'கொரோனா பாதிப்பிலிருந்து, சீனாவின் பொருளாதாரம் மீண்டு வருகிறது' என, ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
ஐ.எம்.எப்.,பின், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான துணை இயக்குனர் பெர்கர் கூறியதாவது:
கொரோனா தொற்றால், வல்லரசு நாடுகள் உட்பட, பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதலில் பரவிய சீனாவிலும், பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இதிலிருந்து, சீனா வேகமாக மீண்டு வருகிறது.வளர்ச்சியடைந்த நாடுகளை விட, சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. பல தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.சீனாவில் தனியார் முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால், மக்களின் பயன்பாடு குறைந்துள்ளது. உற்பத்தியும், பயன்பாடும் சரிசமமாக இருந்தால், நிலையான வளர்ச்சி ஏற்படும். சீனாவில் தொற்று பயம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால், நேரடி அன்னிய முதலீடு குறைந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில், வியட்நாம் அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE