பொது செய்தி

இந்தியா

கோஹ்லி வீட்டில் 'தேவதை' : மகள் பிறந்த உற்சாகம்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை: கோஹ்லி, அனுஷ்கா சர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 31. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. புத்தாண்டில் மனைவி பிரசவத்திற்காக, ஆஸ்திரேலியா சென்ற கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்பினார்.இதனிடையே இன்று(ஜன.,11) கோஹ்லி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட
ViratKohli, virushka, babygirl, விராட் கோஹ்லி, பெண் குழந்தை, அனுஷ்கா சர்மா,

மும்பை: கோஹ்லி, அனுஷ்கா சர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 31. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. புத்தாண்டில் மனைவி பிரசவத்திற்காக, ஆஸ்திரேலியா சென்ற கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்பினார்.இதனிடையே இன்று(ஜன.,11) கோஹ்லி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'நாங்க இப்ப மூணு பேர், 2021ல் வந்தாச்சு,' என தெரிவித்து இருந்தார்.


latest tamil news



அப்பா கோஹ்லி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தி: இன்று(ஜன.,11) மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது அன்பு, பிரார்த்தனை, வாழ்த்துக்கள் என அனைத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனுஷ்கா, குழந்தை இருவரும் நலமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு எல்லோரும் மரியாதை தருவீர்கள் என நம்புகிறோம். அன்புடன் விராட். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜன-202107:14:58 IST Report Abuse
 Muruga Vel இந்த தடவை சினிமாவுக்கு வாரிசு ..அடுத்த தடவை கிரிக்கட்டுக்கு ..
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஜன-202120:44:23 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பெருமிதம் கொள்கிறோம். குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X