திருச்சி: முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சியில் இன்று பா.ஜ.,பொறுப்பாளர் சிடி ரவி பேசியதாவது:"அதிமுக பெரும்பான்மை கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அந்த கட்சியே தீர்மானிக்கும்... அதிமுக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை பா.ஜ., ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்..

அதே சிடி ரவிதான் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகா, கோவா போல தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி 2021-ல் அமையும் என்று சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்று இவ்வாறு பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE