3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலவை அரசே ஏற்கும்

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (11+ 26)
Share
Advertisement
புதுடில்லி :“முன்களப் பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும் செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, 'சீரம் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசிக்கும், அவசர
முன்கள பணியாளர்கள், தடுப்பூசி செலவு,  அரசு, பிரதமர்  மோடி, நரேந்திர மோடி, கொரோனா, வைரஸ், கோவிட்19

புதுடில்லி :“முன்களப் பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும் செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, 'சீரம் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசிக்கும், அவசர காலத்தில் பயன்படுத்த, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.இந்த தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், வரும், 16ம் தேதி, நாடு முழுதும் துவங்க உள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், தடுப்பூசி வினியோக நடைமுறை குறித்தும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 16ம் தேதி தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர், நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டதன் விளைவாக, உலகெங்கும் கொரோனா பரவியது போல், இந்தியாவில் பரவவில்லை என்றார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டது கூட்டாட்சிக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை வெளிநாட்டு தடுப்பூசிகளை விட செலவு குறைந்தவை. நமது தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். உலக நாடுகளில் இதுவரை 2.5 கோடி மக்களுக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய இருக்கிறோம். தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு, இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு தடுப்பூசி மருந்துகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், உலகில் உருவாக்கப்பட்டுள்ள இதர தடுப்பூசிகளைக் காட்டிலும், விலை குறைவானவை.அதிக செயல்திறன் உடைய தடுப்பூசிகள், நாட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நம் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவற்றை தயாரித்துள்ளனர்.மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும், உலகின் மிகப்பெரிய திட்டம், நம் நாட்டில், வரும், 16ம் தேதி துவங்க உள்ளது.


கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று சேவையாற்றி வரும், முன்களப் பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, முதற்கட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மூன்று கோடி பேருக்கும், தடுப்பூசிக்கு ஆகும் செலவை, மாநில அரசு ஏற்கத் தேவையில்லை. அந்த செலவை, மத்திய அரசே ஏற்கும். சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தவிர, வேறு யாரும், இந்த தடுப்பூசியை முதற்கட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள், தங்கள் வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். முதற்கட்டத்தில் முந்தவேண்டாம்.உலகில் உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.5 கோடி பேருக்கு மட்டுமே, இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில், அடுத்த சில மாதங்களில், 30 கோடி பேருக்கு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


1.1 கோடி 'டோஸ்' ஆர்டர்


மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா' நிறுவனத்திடம் இருந்து, கொரோனா வைரசுக்கான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு, நேற்று, 'ஆர்டர்' செய்தது. அதன்படி, 1.1 கோடி தடுப்பூசி மருந்தின், 'டோஸ்'களை வாங்க, ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்தின் ஒரு டோஸ் விலை, 200 ரூபாயாக நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், ஜி.எஸ்.டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, விற்க உள்ளது.


'ஸ்டார்ட் அப் இந்தியா' மாநாடு


இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில்,' ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த, 2016ல் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் சர்வதேச மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், 'வீடியோ கான்பரஸ்' வழியாக நடக்க உள்ளது.

இந்த மாநாடு பற்றி, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:இந்த மாநாட்டில், சுயதொழில் துவக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். நம், 'ஸ்டார்ட் அப்' 'ஹீரோ'க்கள், பெரும் நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், சிறிய நகரங்களில் இருந்தும் உருவாகியுள்ளனர் என்பதில் பெருமிதப்படுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
12-ஜன-202110:14:08 IST Report Abuse
Shroog இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசி இலவசமாக கொடுப்பது அரசின் கடமை. இதை கூட கொடுக்க முடியாத அரசை ஒழித்து கட்ட வேண்டும்
Rate this:
12-ஜன-202115:56:27 IST Report Abuse
மனுநீதிஉனக்கு தடுப்பூசி பிரச்சனையா இல்லை அரசு பிரச்சனையா? சுகாதார துறை மாநில அரசின் கீழ் வருகிறது. கண்டிப்பாக தமிழக அரசு ஏழைகளுக்கு மற்ற தடுப்பூசிகள் போல் இதையும் இலவசமாக போடும்.உன்னைபோன்ற திமுக சொம்பு தேர்தலில் பிரச்சாரம் பண்ணும் விஷயமல்ல இது....
Rate this:
Cancel
12-ஜன-202109:37:55 IST Report Abuse
ஆரூர் ரங் நோயாளிகளோடு நேரடித் தொடர்பிலிருக்கும் மருத்துவத் துறைக்குத்தான் நோய்த் தொற்று👹 ஆபத்து அதிகம். அவர்களுக்குத்தான் தடுப்பூசி உடனடித்🙏 தேவை. உச்சகட்ட பாதுகாப்பிலிருக்கும் பிரதமர் போன்றவர்களுக்கல்ல. ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் அது அதிகார துஷ்பிரயோகம்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-ஜன-202109:12:21 IST Report Abuse
J.Isaac நம் இந்தியாவின் முதல் களப்பணியாளர் பிரதமர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X