புதுடில்லி :'மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக இதுவரை அறிவியல் பூர்வமான எந்த தகவலும் இல்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:நாட்டில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும் இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியுள்ளதாக அறிவியல்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. அதனால் மக்கள் கவலைப்பட தேவையில்லை.
![]()
|
இதற்கிடையே ''பறவைக் காய்ச்சல் விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE