தெருவிளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 93வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார் இடையர்பாளையம், அம்மாசைக்கோனார் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:21) கடந்த ஓராண்டுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- ராஜன், அம்மாசைக்கோனார் வீதி.
பாலாஜி நகரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 61வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், பாலாஜி நகரில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- அருண், பாலாஜி நகர்.
குளமானது வீதிபாலக்காடு ரோடு, குனியமுத்துார் வகாப் பெட்ரோல் பங்க் எதிரில், வி.பி.சி., நகர், வசந்தம் நகர் இரண்டாவது வீதி தாழ்வாக இருப்பதால், சிறு மழை பெய்தால் கூட, மழைநீர் குளம் தேங்கி விடுகிறது; மக்கள் அவதிப்படுகின்றனர்.- ஜாபர் அலி, வசந்தம் நகர்.
ஆபத்தான மின் கம்பம்மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, பாப்பநாயக்கன்பாளையம், ஜோதிநகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 2) சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. புது கம்பம் அமைக்க வேண்டும்.- திவாகர், ஜோதி நகர்.
சாலையை செப்பனிடணும்மாநகராட்சி, மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, கவுண்டர் மில், என்.சி.பி.நகர், லட்சுமி கார்டன் மற்றும் ரிதம் நகர்களில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; மழைநீர் தேங்குகிறது.- சந்திரசேகரன், லட்சுமி கார்டன்.
தெரு நாய்கள் தொல்லைதிருச்சி ரோடு, சுங்கம், சிவராம் நகர் பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையின் நடுவில் நிற்கும் இவற்றால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; இவை மக்களை அச்சுறுத்துகின்றன.-ரகுநாதன், சிவராம் நகர்.
சிக்னல் இல்லாததால் சிக்கல்சூலுாரில், திருச்சி ரோடு - ரயில்வே பீடர் ரோடு சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். பெரும் விபத்து நடக்கும் முன், இப்பகுதியில், சிக்னல் அமைக்க வேண்டும் அல்லது போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த வேண்டும்.- மயில்சாமி, சூலுார்.
தார் சாலை அமைக்கணும்அவிநாசி ரோடு, சிட்ரா, சிவில் ஏரோட்ராம் அருகில், பிருந்தாவன் நகரில் தார் சாலை வசதியில்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.- அம்சவேணி, பிருந்தாவன் நகர்.
விளக்கு பொருத்த வேண்டும்வடவள்ளி அருகே, பாப்பநாயக்கன்புதுார், திருமலைநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:5) விளக்கு பொருத்தப்படவில்லை.-ஜெயப்பிரகாஷ், மாரியம்மன் கோவில்.
குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, செல்வபுரம், எல்.ஐ.சி.,காலனி, ஜி.சி.வி., நகரில் உள்ள, மின் வாரிய அலுவலகம் அருகில், குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சக்தி, செல்வபுரம்.
வாகன ஓட்டிகள் அச்சம்பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி வீதியில், சாலை சிதிலமடைந்து, குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- கோவிந்தராஜ், காந்திபுரம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE