பொது செய்தி

தமிழ்நாடு

ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவித்தொகை வேணுமா

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவை:பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு, மாநில அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 'அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில்,

கோவை:பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு, மாநில அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 'அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில், மாதம், 5 ஆயிரம் ரூபாய் என, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவி தொகையை பெற, 2020ம் ஆண்டு ஜன., முதல் டிச., வரையிலான காலக்கட்டத்தில் முழு நேர படிப்பில் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, அனுப்பி வைக்க கேட்டுகொள்ளப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு, கல்லுாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X