தொண்டாமுத்துார்: கோவை புறநகர் பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மருதமலை, வடவள்ளி, வீரகேரளம், வேடபட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பகல், 12:00 மணிக்கு சாரல் மழை துவங்கியது. தொடர்ந்து சுமார், 4 மணி நேரம் இடைவிடாது சாரல் மழை பெய்தது.தற்காலிக பயணிகள் நிழற்குடை தேவைவேடப்பட்டி: வேடபட்டியில், கோவைக்கு செல்லும் வழி மற்றும் கோவையில் இருந்து வரும் வழி என, இரண்டு பஸ் ஸ்டாப்கள் உள்ளன. தற்போது, இந்த இரண்டு பஸ் ஸ்டாப்களிலும், புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது, மழையும் பெய்து வருவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மழையின்போது ஒதுங்க கூட இடமில்லாமல் உள்ளது. எனவே தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.அ.தி.மு.க., சார்பில் 1,008 பொங்கல்தேவராயபுரம்: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து, அனைத்து கட்சிகள் சார்பிலும், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், அ.தி.மு.க., சார்பில், 1,008 பொங்கல் வைத்து இன்று கொண்டாடப்பட உள்ளது.மார்கழி நாட்டிய திருவிழாகோவை: மார்கழியில் உலகம் முழுவதும் பிணி நீங்கி மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்ற நோக்கில், மூன்று நாட்கள் மார்கழி நாட்டிய திருவிழா, நேற்று ரேஸ்கோர்ஸ் சாரதாம்மாள் கோவிலில் துவங்கியது. மூன்று நாட்களும் தொடர்ந்து நாட்டிய நிகழ்வுகள், வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடக்கவுள்ளன. கிளாசிக்கல் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.பள்ளிகளை திறக்குமாறு ஆர்ப்பாட்டம்கோவை: கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படுவதாக கூறி, மீண்டும் கல்வி நிறுவனங்களை திறக்க கோரி வலியுறுத்தினர். இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் உட்பட, 20பேர் பங்கேற்றனர்.நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழாகோவை: கோவை குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாஜிஸ்திரேட் கோர்ட் கட்டடம் அருகில், மண்பானையில் பெண் வக்கீல்கள் பொங்கல் வைத்தனர். இதையடுத்து, நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் வாழைமரம் மற்றும் மா இலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள் வழங்கப்பட்டன.கோர்ட்டுக்கு 6 நாள் பொங்கல் விடுமுறைகோவை: பொங்கல் தினத்தை முன்னிட்டு, வரும் 14ம் தேதி முதல் 17 வரை, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாகும். ஆனால், நீதிமன்றங்களுக்கு, இன்று முதல், 17 வரை, மொத்தம் ஆறு நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் தினத்துக்கு முந்தைய இரண்டு நாட்களும் சேர்த்து விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி முதல், கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.வக்கீல் சங்கத்திற்கு பழைய நிர்வாகிகள்கோவை: கோவை வக்கீல் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்தாண்டு தேர்வான நிர்வாகிகள், முழுமையாக பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்தாண்டு சங்க தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு பதிலாக, பழைய நிர்வாகிகளே தொடருவது எனவும், இது தொடர்பாக, பொதுக்குழு கூட்டம் நடத்தி முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஐகோர்ட் முழுமையாக செயல்பட கோரிக்கைகோவை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) பொதுக்குழு கூட்டம், கோவையில் நடந்தது. வரும் 18 முதல், கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அது போல சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையும் முழுமையாக செயல்பட வேண்டும். வக்கீல் சங்க கூட்டுக்குழு மற்றும் கூட்டமைப்பை, இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE