கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்| Dinamalar

கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்

Added : ஜன 11, 2021
Share
பனாஜி : கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில், மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்தார். மனைவி பலியானார். மத்திய ஆயுஷ் துறை அமைச்சராக இருப்பவர், பா.ஜ.,வை சேர்ந்த ஸ்ரீபத் நாயக், 68. கோவாவை சேர்ந்த இவர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோவிலுக்கு மனைவியுடன் சென்றார். கோவிலில் தரிசனம் முடித்து, கோவாவுக்கு நேற்று மாலை, காரில் திரும்பிக் கொண்டிருந்தார். உத்தரகன்னட

பனாஜி : கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில், மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்தார். மனைவி பலியானார்.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சராக இருப்பவர், பா.ஜ.,வை சேர்ந்த ஸ்ரீபத் நாயக், 68. கோவாவை சேர்ந்த இவர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோவிலுக்கு மனைவியுடன் சென்றார். கோவிலில் தரிசனம் முடித்து, கோவாவுக்கு நேற்று மாலை, காரில் திரும்பிக் கொண்டிருந்தார். உத்தரகன்னட மாவட்டம், அங்கோலா அருகே வந்த போது, கார் விபத்துக்குள்ளானது. இதில், அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் மனைவி விஜயா, உதவியாளர் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அமைச்சர், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X