பேரூர்:தொடர் மழையால், மக்காச்சோளத்தை உலர்த்தமுடியாமல்,விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கடந்த செப்.,ல், 500 எக்டருக்கும் அதிகமாக மக்காச்சோளம் நடவானது. கடந்த மாத இறுதியில் அறுவடை துவங்கியது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது.இந்நிலையில், ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால், அறுவடையான மக்காச்சோளத்தை உலர்த்த முடியவில்லை. பல இடங்களில் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.நிலங்களில் வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் முளைக்கும் நிலை உருவாகி உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பருவம் தவறி பெய்யும் தொடர் மழையால், பயிர்கள் கடுமையாக பாதித்துள்ளன. பறவைகளால் சேதம், விலை வீழ்ச்சி போன்ற நிலையில், மழை மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதலீடு கிடைப்பதே சந்தேகமாகி விட்டது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE