இந்திய பார்லிமென்ட் வரலாற்றில் முதன் முறையாக, உரை விபரங்கள் காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வழக்கமான அல்வா கிண்டும் மரபு நிகழ்ச்சியையும், இந்தாண்டு கைவிட திட்டமிடப்பட்டு உள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், வரும், 29ல், ஜனாதிபதி உரையுடன் துவங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம், 1ம் தேதி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, பார்லிமென்ட் திருவிழா கோலம் காணும்; அதற்கு முந்தைய பட்ஜெட் தயாரிப்பு நிகழ்ச்சிகளும், மத்திய அரசு வட்டாரங்களில் கவனத்தையும் ஈர்க்கும்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பட்ஜெட் கூட்டத் தொடரை தவிர்க்கும் தமிழக எம்.பி.,க்கள் - புதுடில்லி நிருபர் -கடந்த, 2020ல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பார்லி.,யின் இரு கூட்டத்தொடர், திட்டமிட்ட நாட்களை விட, விரைவாக முடித்துக் கொள்ளப் பட்டன. குளிர்கால கூட்டத் தொடர், முற்றிலுமாக கைவிடப்பட்டது. தற்போது கூடவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், மிக நீண்ட நேரம் சபை நடவடிக்கைகள் நடைபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜனாதிபதி உரை மீதான விவாதம், பட்ஜெட் தாக்கல், அதன் மீதான விவாதம், நிதி மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட பல்வேறு சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
மேலும், 'கடந்த கூட்டத் தொடரின் போது ரத்து செய்யப்பட்ட கேள்வி நேரம், இந்த கூட்டத் தொடரின் போது கட்டாயம் இடம் பெறும்' என, சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடரை பாதுகாப்பாக நடத்தும் பணிகளில், பார்லி., ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஊழியர்கள், தொலைபேசி வாயிலாக, எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத் தொடர் துவங்குவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்னதாக, டில்லியில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட, எம்.பி.,க்கள், அதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத எம்.பி.,க்களுக்கு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கட்டாயமாக தடுப்பூசி செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.,க்கள், கூட்டத்தொடரில் பங்கேற்க தயங்குவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 60 வயதுக்கு மேற்பட்ட, 18 எம்.பி.,க்கள் உள்ளனர்.இவர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதை தவிர்க்க நினைப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சி தலைமையுடன் பேசி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வேட்பாளராக்கவும், எம்.பி.,க்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்றால், இந்த பணிகள் பாதிக்கப்படும் என்பதால், கூட்டத் தொடரை தவிர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி எம்.பி.,க்களும், இதே மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.தமிழகத்தைச் சேர்ந்த, காங்., - எம்.பி., வசந்தகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும், மூத்த எம்.பி.,க்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:எம்.பி.,க்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடரை பாதுகாப்புடன் நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பார்லி., வளாகம் முழுதும், தினமும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பணியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE