பொது செய்தி

தமிழ்நாடு

தங்கத்தில் முதலீடு செய்ய அழைக்கிறது அஞ்சல்துறை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவை;நடப்பு ஆண்டுக்கான தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்ய அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.தங்கத்தின் இறக்குமதியை குறைக்க, கடந்த 2015ம் ஆண்டு தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை கோட்டத்திலுள்ள தலைமை அஞ்சல்மற்றும் துணை அஞ்சல்நிலையங்களில், இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில்,

கோவை;நடப்பு ஆண்டுக்கான தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்ய அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.தங்கத்தின் இறக்குமதியை குறைக்க, கடந்த 2015ம் ஆண்டு தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை கோட்டத்திலுள்ள தலைமை அஞ்சல்மற்றும் துணை அஞ்சல்நிலையங்களில், இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில், ஒருவர் குறைந்த பட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டித் தொகை வழங்கப்படும்.நடப்பாண்டு, ஒரு கிராம், 5 ஆயிரத்து 104 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை, வரும் ஜன., 15ம் தேதி வரை மட்டுமே.தங்க பத்திர முதலீட்டு திட்டத்தின், முதலீடு காலம் எட்டு ஆண்டுகள். அதன் இறுதியில், அன்றைய மதிப்புக்கு, தங்க பத்திரங்களை, பணமாக மாற்றி கொள்ளலாம். தேவையெனில், ஐந்தாண்டு நிறைவில், பத்திரங்களை, பணமாக மாற்றும் வசதியும் உண்டு என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X