சென்னை : 'தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று பகல் வரையிலும், சில இடங்களில் மிக கன மழையும், மற்ற இடங்களில் கன மழையும் பெய்யும்.திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.
மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நாளை திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வரும், 14, 15ம் தேதிகளில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புவனகிரியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
பரங்கிப்பேட்டை, 9; ராமநாதபுரம், குடவாசல், 6; ராமேஸ்வரம், கொள்ளிடம், 5; மணமேல்குடி, முத்துப்பேட்டை, மண்டபம், சூரன்குடி, அறந்தாங்கி, அய்யம்பேட்டை, 4; சிதம்பரம், வாலிநோக்கம், கும்பகோணம், ஜெயங்கொண்டம், சேரன்மகாதேவி, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை வரை மீனவர்கள், அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE