சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் தர்ணா

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவை: கோவை சத்தி சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இப்பணியை, தனியார் நிறுவனம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்,கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, கலெக்டரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.சேவா பாரதி ரத்ததான

கோவை: கோவை சத்தி சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இப்பணியை, தனியார் நிறுவனம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்,கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, கலெக்டரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.சேவா பாரதி ரத்ததான முகாம்கோவை: சேவா பாரதி சார்பில் கோவை, திருப்பூரில் நடந்த ரத்ததான முகாமில், 266 பேர் பங்கேற்றனர். ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 94 பேர், சிறுமுகையில், 36, கருமத்தம்பட்டியில், 66 மற்றும் திருப்பூரில், 70 என, 266 பேர் ரத்த தானம் செய்தனர். இத்தகவலை, சேவா பாரதி மாநில தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.'ஒன்வே'யில் பறந்த வாகனங்கள்!கோவை: செல்வபுரம் - டவுன்ஹால் வழித்தடத்தில், செல்வசிந்தாமணி குளத்தை ஒட்டிய ரோட்டில், நேற்று காலை, ஒரு சரக்கு லாரி பொருட்களை இறக்குவதற்கு நிறுவனம் ஒன்றுக்குள் நுழைய 'ரிவர்ஸ்' சென்றபோது, பாதி ரோட்டை மறித்து விட்டது. டிரைவர் லாரியை திருப்ப, படாதபாடுபட, பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் செல்வபுரம் நோக்கி, 'சென்டர் மீடியன்'களையும் பொருட்படுத்தாமல் 'ஒன்வே'யில் பறந்தனர். இதனால் டவுன்ஹால் நோக்கி சென்ற வாகனங்கள் நெரிசலில் திணறின.உடைப்பு சரிசெய்யும் பணிகோவை: சிங்காநல்லுார் அடுத்து கள்ளி மடையை ஒட்டி செல்லும் சங்கனுார் வாய்க்காலில், சமீபத்தில் பெய்த மழையால் பக்கவாட்டில் லேசான உடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகேயுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள், சுடுகாடு என சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வாய்க்கால் அடைப்பையும், உடைப்பையும் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள கருப்பராயன் கோவில் அருகே, முதற்கட்டமாக நேற்று வாய்க்கால் திட்டு உயர்த்தும் பணி துவங்கியது.நெருக்கடி தராதீங்க... ப்ளீஸ்!கோவை: புதிய கணக்குகளுக்கான இலக்கை அடைய, ஊழியர்களை நிர்பந்தித்ததை கண்டித்தும், அஞ்சல்நிலையங்களிலுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்யவும், ஜி.டி.எஸ்., - எம்.டி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தியும், அஞ்சல் ஊழியர்கள் இன்று தலைமை தபால் நிலையத்தில், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.போலி 'ஆப்'கள் உஷார்!கோவை: கோவிட்-19 தடுப்பூசி பெற, சில 'ஹேக்கர்கள்' தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு அனுமதியின்மையை பயன்படுத்த முயற்சி செய்யலாம். ஒரே பெயர்களை கொண்ட பயன்பாடுகளை உருவாக்கி, அவற்றை மோசடி செய்யலாம். இந்த பயன்பாடுகளின் நிதி, அடையாளம் மற்றும் பிற மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தனிப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டாம் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் பொங்கல் விழா!கோவை: கொரோனா காரணமாக மூடப்பட்ட கல்லுாரிகளில், தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இறுதியாண்டு மாணவர்கள் மூலம், கல்லுாரிகளில் இன்று மற்றும் நாளை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்கள், பொங்கல் வைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X