கோவை:கோவை மாநகராட்சியில், வரி வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பிரதான அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது; துணை கமிஷனர் மதுராந்தகி தலைமை வகித்தார். உதவி கமிஷனர் (வருவாய்) அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மண்டல உதவி கமிஷனர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் பங்கேற்றனர்.நடப்பு நிதியாண்டில், ரூ.170.44 கோடி, கடந்தாண்டு நிலுவை ரூ.45.70 கோடி என, ரூ.216.15 கோடி வசூலிக்க வேண்டும். இதுவரை, ரூ.116.71 கோடி வசூலாகி இருக்கிறது; இன்னும், ரூ.99.44 கோடி வசூலிக்க வேண்டும். நிதியாண்டு முடிய, இரண்டரை மாதங்களே இருப்பதால், வரி வசூலை முடுக்கி விட, கூட்டம் நடத்தப்பட்டது.அதில், துணை கமிஷனர் பேசுகையில், ''உங்களுக்கு ஒதுக்கியுள்ள வேலையை பாருங்கள்; தேவையில்லாத விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். இதுவரை, 62 சதவீதமே வரி வசூலாகி இருக்கிறது.
இம்மாத இறுதிக்குள், 80 சதவீதம் வசூலித்திருக்க வேண்டும்,'' என்றார்.மண்டலம் வாரியாக, வரி வசூல் தொடர்பாக, ஆய்வு செய்தார். கிழக்கு மண்டலத்தில் வரி வசூல் தொய்வாக இருந்தால், வரி வசூலர்களை, துாக்கி விடுவோம் என, துணை கமிஷனர் கடுமையாக எச்சரித்தார். ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள இலக்கை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், அறிவுறுத்தினார்.வரி வசூலில் எந்த மண்டலம் டாப்'வடக்கு - முதலிடம்மேற்கு - இரண்டாமிடம்தெற்கு - மூன்றாமிடம்மத்தியம் - நான்காமிடம்கிழக்கு - ஐந்தாமிடம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE