பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு

Added : ஜன 11, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'தற்போதுள்ள இடஒதுக்கீடு நடைமுறையை கைவிட்டு, பொருளாதாரம் மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான, இட ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும்' என, இந்திய ஜனநாயக கட்சி தலைவர், ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், 2,400க்கும் அதிகமான ஜாதிகள் உள்ளன. 'இடஒதுக்கீடு, 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது' என்ற, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உள்ள

சென்னை : 'தற்போதுள்ள இடஒதுக்கீடு நடைமுறையை கைவிட்டு, பொருளாதாரம் மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான, இட ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும்' என, இந்திய ஜனநாயக கட்சி தலைவர், ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், 2,400க்கும் அதிகமான ஜாதிகள் உள்ளன. 'இடஒதுக்கீடு, 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது' என்ற, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி வருகிறோம். இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்' என்கிறார். அவரை பின்பற்றி, ஆரிய வைசிய செட்டியார்கள் சங்கமும், 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறது.

இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில், 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உடைய, பார்க்கவ குலத்தினரும், தங்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என, கேட்பர்.மேலும், பல அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும், அவரவர் ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தால், இட ஒதுக்கீட்டின் அளவு, 69 சதவீதத்தில் இருந்து, 1,000 சதவிகிதமாக உயர்ந்து விடும்.தற்போதைய ஜாதிவாரி இடஒதுக்கீட்டு முறை, சமுதாய பிரிவினையை தான் ஏற்படுத்தும். எனவே, தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு நடைமுறையை கைவிட்டு, பொருளாதார மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான, இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, ரவி பச்சமுத்து தெரிவித்துஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X