திருப்பூர்:காஜா பட்டன் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரும் 1ம் தேதி அமலுக்கு வருவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம், தாராபுரம் ரோட்டில் உள்ள சங்க அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் திருமுருகேஷ் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின், இதுவரை, காஜாபட்டன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பத்து ஆண்டுகளாக, கட்டணம் சீராக வைக்கப்பட்டுள்ளது. ஊசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஜா, பட்டன் மெஷின் உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளன.கொரோனாவுக்குப்பின், 25 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது; கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.இதனால், காஜா-பட்டன் செலவினங்கள் அதிகரித்துள்ளன. தவிர்க்க முடியாத காரணத்தால், தற்போது, காஜா பட்டன் விலை, 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது;வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல், கட்டண உயர்வு அமலுக்குவருகிறது என, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE