பொது செய்தி

தமிழ்நாடு

விஜயின் 'மாஸ்டர்' இணையதளத்தில் 'லீக்'

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சென்னை : மாஸ்டர் படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில், 'லீக்' ஆனதால், கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன. கொரோனா தாக்கம் தணிந்த நிலையில், பொங்கல் முதல் தியேட்டர்கள் சுறுசுறுப்பாக இயங்க உள்ளன. விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் வெளியாவதே இதற்கு முக்கிய காரணம். ஒன்றரை ஆண்டாக மாஸ்டர் படம், தியேட்டரில் வெளியாகவே காத்திருந்தது. இந்நிலையில்,

சென்னை : மாஸ்டர் படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில், 'லீக்' ஆனதால், கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

கொரோனா தாக்கம் தணிந்த நிலையில், பொங்கல் முதல் தியேட்டர்கள் சுறுசுறுப்பாக இயங்க உள்ளன. விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் வெளியாவதே இதற்கு முக்கிய காரணம். ஒன்றரை ஆண்டாக மாஸ்டர் படம், தியேட்டரில் வெளியாகவே காத்திருந்தது. இந்நிலையில், வினியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்ட மாஸ்டர் படத்தின் சில காட்சிகள், நேற்று இணையத்தில் வெளியாகி, மாஸ்டர் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில மணி நேரத்தில் அக்காட்சிகள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளத்தில் பரவின.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் கூறுகையில், 'ஒன்றரை ஆண்டு உழைப்பு. மாஸ்டர் படத்தை தியேட்டரில் கொண்டாடுங்கள். படத்தின் காட்சி களை இணையத்தில் பரப்ப வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.இதற்கிடையில், நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படம், அதே தினத்தில் வெளிநாடுகளில் ஆன்லைன் தளத்தில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, ஈஸ்வரன் படத்தை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என மறுத்தனர்.

இதையடுத்து, சில மணி நேர பேச்சுக்கு பின், ஆன்லைன் வெளியீட்டை ரத்து செய்வதாக, படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால், ஈஸ்வரன் படம் திட்டமிட்டபடி தியேட்டரில் வெளியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X