விரைவில் உணவு பஞ்சம்!

Added : ஜன 12, 2021
Share
Advertisement
மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும். விவசாயிகள், நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களின் நலனுக்கு எதிரான எதையும், நாம் செய்யக்கூடாது. - மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்! மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் எதிர்காலத்துக்கு ஆபத்தை விளைவிக்க
  விரைவில் உணவு பஞ்சம்!

மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும். விவசாயிகள், நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களின் நலனுக்கு எதிரான எதையும், நாம் செய்யக்கூடாது.
- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
வாபஸ் பெற வேண்டும்!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் எதிர்காலத்துக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை. எதற்காக இந்த சட்டங்களை, அரசு நிறைவேற்றியது என, தெரியவில்லை. இந்த சட்டங்களை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதற்காக, விவசாய சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.
- சச்சின் பைலட் , முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
அலட்சியப்படுத்துவதா?
மத்திய அரசின் செயல், விவசாயிகளை அலட்சியப்படுத்தும் விதத்தில் உள்ளது. நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை, மத்திய அரசு தொடர்ந்து அவமானப்படுத்தி வருவது நல்லதல்ல. விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுதும், மத்திய அரசிடம் மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
- அகிலேஷ் யாதவ் ,தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X