டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் பதவி நீக்கத்துக்கு எதிர்க்கட்சி தீவிரம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அதிபர் டொனால்டு டிரம்ப்பை பதவி விலக செய்ய, பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியை, ஜனநாயக கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து, வரும், 20ல், அவர் பதவி ஏற்க உள்ளார்.அவரது வெற்றியை உறுதி செய்யும்

வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அதிபர் டொனால்டு டிரம்ப்பை பதவி விலக செய்ய, பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியை, ஜனநாயக கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து, வரும், 20ல், அவர் பதவி ஏற்க உள்ளார்.அவரது வெற்றியை உறுதி செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்காக, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் கூடியது. அப்போது, 'கேப்பிடோல்' என்றழைக்கப்படும், பார்லி., கட்டடத்தின் முன், டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.அப்போது வெடித்த பயங்கர கலவரத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்களும், தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து, அமெரிக்க பார்லி.,யில், 25வது சட்ட திருத்தத்தை கொண்டுவர, ஜனநாயக கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இது, அதிபரை பதவியில் இருந்து விலக்க, துணை அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தமாகும். இந்த சட்ட திருத்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்க கோரி, பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஒருவேளை சட்ட திருத்த தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை எனில், பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்புக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளையும், ஜனநாயக கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பார்லி., உறுப்பினர்களுக்கு, சபாநாயகர் நான்சி பெலோசி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு, அதிபர் டொனால்டு டிரம்பினால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரண்டையும் காக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது அதிபரால் நடத்தப்படும் வன்முறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது குறித்து உடனடி நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும்.டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய, துணை அதிபர் மைக் பென்சுக்கு அதிகாரம் வழங்கும், 25வது சட்ட திருத்தத்தை சபையில் கொண்டு வருவோம்.

அதன்பின், 24 மணி நேரத்திற்கு பின், அதிபர் டிரம்ப்புக்கு எதிராக சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒருவேளை கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இருமுறை கண்டன தீர்மானத்துக்கு ஆளான அதிபர் என்ற பெயரை, டிரம்ப் பெறுவார்.அர்னால்டு கண்டனம்அமெரிக்க பார்லி., தாக்குதல் சம்பவம் குறித்து, ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா முன்னாள் கவர்னருமான, அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கூறியதாவது:அதிபர் டிரம்ப், நியாயமான தேர்தல் முடிவுகளை தடுக்க முயன்றார்.
பொய்களால் மக்களை தவறாக வழிநடத்த சதித்திட்டம் தீட்டினார். நாஜிக்கள், 1938ல் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை நடத்தினர். அதேபோல், கடந்த, 6ம் தேதி நடந்த கலவரத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள், நாஜிக்களுக்கு இணையான வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றினர். டிரம்ப் முதுகெலும்பு இல்லாதவர். தோல்வியடைந்த தலைவர். அமெரிக்க வரலாற்றில், மிகவும் மோசமான அதிபர் என்ற பெயரை பெற்றுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.-----------------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X