பொது செய்தி

இந்தியா

6.59 லட்சம் பரிசோதனை: 16,000 பேருக்கு பாதிப்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுடில்லி : கடந்த, 24 மணி நேரத்தில், 6.59 லட்சம் பேரிடம் நடந்த பரிசோதனைகள் வாயிலாக, 16 ஆயிரத்து, 311 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 6.59 லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், 16 ஆயிரத்து, 311 பேரிடம் தொற்று

புதுடில்லி : கடந்த, 24 மணி நேரத்தில், 6.59 லட்சம் பேரிடம் நடந்த பரிசோதனைகள் வாயிலாக, 16 ஆயிரத்து, 311 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 6.59 லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், 16 ஆயிரத்து, 311 பேரிடம் தொற்று உறுதியானது.இவர்களுடன், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 66 ஆயிரத்து, 595 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 2.22 லட்சம் பேர், சிகிச்சையில் உள்ளனர்.

பாதிப்பில் இவர்களின் விகிதம், 2.13 சதவீதம்.தொடர் சுகாதார நடவடிக்கைகளால், வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரு கோடியே, 92 ஆயிரத்து, 909 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 96.43 சதவீதமாக உள்ளது.கொரோனா பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 161 பேர் இறந்துள்ளனர்.இதுவரையிலான பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 160 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.44 சதவீதமாக உள்ளது.கொரோனா இறப்பில், 50 ஆயிரத்து, 061 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 12 ஆயிரத்து, 222 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா, 12 ஆயிரத்து, 140 பேருடன் அடுத்த இடத்திலும் உள்ளன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

96 பேருக்கு உருமாற்ற கொரோனா
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உருமாற்றம் அடைந்த, வீரியம் மிக்க கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து நாடு திரும்பிய, 96 பேரிடம், உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள், தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்பில் இருந்தோரிடம் பரிசோதனைகள் தீவிரம் அடைந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X