லண்டன்: வழக்கு செலவுகளுக்கு பணம் தர கோரிய விஜய் மல்லையாவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் விஜய்மல்லையா தன் கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்துக்காக 16-க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்றார்.
அந்ததொகையை திரும்ப செலுத்தாமல் ஐரோப்பிய நாடானா பிரிட்டனுக்கு தப்பி சென்றார். அங்கு கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, தற்போது ஜாமினில் உள்ளா்ர. அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
![]()
|
இந்நிலையில் விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துக்கள் திவால் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொத்து விற்பனையில் கிடைத்த தொகையை மல்லையாவின் வழக்கு செலவுகளுக்கு வழங்க லண்டன் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு செலவுகளுக்கு தொகையை விடுவிக்க மறுத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE