முச்சந்திக்கு வந்த 'லேடி' விவகாரம்:... பச்சோந்தியே கேவலப்படும் 'அவதாரம்'

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 12, 2021 | |
Advertisement
பொங்கல் பண்டிகைக்கு பூஜை மற்றும் மளிகை பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் சென்றனர். மக்கள் கூட்டத்தால், கடைவீதி களை கட்டியிருந்தது. ரோட்டோரம் மண் பானை விற்று கொண்டிருந்த மூதாட்டியிடம், பேரம் பேசாமல், வாங்கி கொண்டு அருகி லுள்ள கடைக்கு சென்றனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால், இருவரும் காத்திருந்தனர். ''ஏன் மித்து, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க
 முச்சந்திக்கு வந்த 'லேடி' விவகாரம்:... பச்சோந்தியே கேவலப்படும் 'அவதாரம்'

பொங்கல் பண்டிகைக்கு பூஜை மற்றும் மளிகை பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் சென்றனர். மக்கள் கூட்டத்தால், கடைவீதி களை கட்டியிருந்தது. ரோட்டோரம் மண் பானை விற்று கொண்டிருந்த மூதாட்டியிடம், பேரம் பேசாமல், வாங்கி கொண்டு அருகி லுள்ள கடைக்கு சென்றனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால், இருவரும் காத்திருந்தனர்.

''ஏன் மித்து, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க கூட்டமா?''

''ஆமாங்க்கா... பல்லடம் ரோட்ல இருக்க கூட்டுறவு ரேஷன் கடைல துணை சபாநாயகர் கலந்துகிட்டு, பொங்கல் பொருள் கொடுத்திருக்காரு. பங்ஷனுக்கு, பி.ஆர்.ஓ., ஆபிஸ்ல இருந்த யாரும் வராததால டென்ஷன் ஆன அவரு, விழா மேடையிலயே, பி.ஆர்.ஓ.,வுக்கு போன் போட்டு, 'துணை சபாநாயகர் விழான்னா வரமாட்டீங்களா?''

''அரசு திட்டத்த வெளியே கொண்டு போய் சேர்க்ககூடாதுன்னு யாராச்சும் சொல்லியிருக்காங்களான்னு,'' சொல்லி 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாரு. அய்யா... இனி, சரி பண்ணிக்கிறோம்னு சொல்லி, பி.ஆர்.ஓ., சமாளிச்சுட்டாராம்,''

''அதே மாதிரி, அவிநாசி ரேஷன் கடைல சபாநாயகர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. புல், புதர் மண்டிக்கிடந்த ரேஷன் கடை முகப்பு பகுதியில மண் கொட்டி அந்த இடத்தை சமப்படுத்தி, பளிச்சுன்னு ஆக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.

''அப்பா, ஒரு வழியா ரேஷன் கடை சுத்தமாச்சு. அப்டியே, சேவூர் மெயின் ரோட்டுல குழாய் தோண்டி பைப் பதிச்சதால, மேடும் பள்ளமுமா இருக்கிற ரோட்டையும் சரி பண்ணா தேவலை,'' என்றாள் மித்ரா.

''கரெக்ட்தான்டி. இப்டிதான், ஊத்துக்குளி நடுப்பட்டி ஊராட்சிக்கு சி.எம்., விசிட் செஞ்சப்ப அந்த ஊர்ல ரோடு, சாக்கடை வசதின்னு, எல்லா அடிப்படை வேலையும் மின்னல் வேகத்துல செஞ்சு முடிச்சிட்டாங்க. கடந்த மூனு வருஷமா இந்த வேலைகளை செய்ய நிதி இல்லைன்னு தட்டிக்கழிச்சுட்டு வந்த நிலைமைல, சி.எம்., வர்றப்ப மட்டும் எப்படி நிதி வந்துச்சுன்னு அங்க இருக்கவங்க பேசிக்கறாங்க,''

''இப்படி மாசம் ரெண்டு இடத்துக்கு சி.எம்., போனார்னா, தமிழ்நாடே சுத்தமாகிடும்'' என்ற சித்ரா, ''நீ... மண்ணை பத்தி சொல்லும் போது தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. வஞ்சிபாளையம் ரோட்டோரம் குழாய் பதிக்கும் வேலைக்கு குழி தோண்டிட்டு வர்றாங்க,''

''அதில் வெளியேறும் உபரி மண்ணை, லாரில எடுத்துட்டு போறதா, தோழர் கட்சி நிர்வாகி ஒருத்தரு புகார் சொன்னாரு. மண் கடத்தப்படுதுன்னு, தாசில்தாருக்கு பெட்டிஷன் போட்டு, பிரச் னையை பெரிசாக்கிட்டாரு.

''மண் கடத்தப்படலைன்னு... ைஹவேஸ் ஆபீசர்ங்க விளக்கம் சொன்னதுக்கு அப்றம், தன்னோட ஊர் கோவில் முன்னாடி இருக்க பள்ளத்தை நிரப்ப மண் கேட்ட தோழருக்கு, இல்லைன்னு சொல்லி ஆபீசர் கைய விரிச்சுட்டாராம்

,''அப்போது, அருகில் சென்ற ஒரு முதியவர், ''யாரு, முத்துசாமியா? இதோ வந்துட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தம்பி,'' என மொபைல் போனில் பேசியபடியே சென்றார்.

பொருட்களை வாங்கிய சித்ராவும், மித்ராவும், அருகிலுள்ள கார்ப்ரேஷன் ஆபீசக்கு வீட்டு வரி செலுத்த சென்றனர். சில மாற்றுத்திறனாளிகள், மனுவுடன் அங்கு வந்திருந்தனர்.அவர்களை பார்த்த மித்ரா, ''மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமா, முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவங்களுக்கு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'பேட்டரி' வீல்சேர் கொடுத்தாங்க.எம்.எல்.ஏ., ரெக்கமன்டேஷன்ல, தகுதி இல்லாதவங்களுக்கு கொடுத்ததால, ஒரிஜினல் பயனாளிகளுக்கு கிடைக்காம போயிடுச்சாம்,'' என்றாள் சித்ரா

.''இதுல கூடவா சிபாரிசு செய்வாங்க...'' என, ஆதங்கப்பட்ட மித்ரா, ''பாதி பிரச்னைக்கு காரணமே சிபாரிசுதான்'' என்றாள்.''இப்படிதான், பல்லடத்தில, 50 கோடி ரூபா மதிப்புள்ள நிலத்த முறைகேடா கிரயம் பண்ண முயற்சி பண்ணாங்க. இந்த விவகாரம், பதிவுத்துறை தலைவர் வரைக்கும் கொண்டு போயும், சம்மந்தப்பட்ட ஆபீசர எதுவும் செய்ய முடியலையாம். அவரு, சபாநாயகருக்கு நெருங்கியவர்னு ஒரு பேச்சு அடிபடுது,'' என்றாள் மித்ரா.

சித்ராவின் போன் ஒலிக்கவே, ''ஹலோ... பாலசுப்ரமணியம் அங்கிளா. வெளியில இருக்கேன். வீட்டுக்கு போனதும், அப்பாவிடம் கேட்டு சொல்றேன்,'' என பேசி இணைப்பை துண்டித்தாள்.

''வீரபாண்டி பக்கத்துல இருக்க அல்லாளபுரம் செல்லும் ரோட்ல, பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அதிகாரிங்க அடையாளம் கண்டும், இனியும் அகற்றலையாம்,'' என, அடுத்த மேட்ட ருக்கு தாவினாள் சித்ரா.

''ரூலிங் பார்ட்டில இருக்கறவங்க தலையீடு இருக்கறதால ஆபீசர்ஸ் 'சைலன்ட்டா' இருக்காங்களாம்,''

''யாராக இருந்தால், சட்டம் தன் கடமையை செய்யும் என, நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அதிலும், ஒரு சிலர் கட்சிக்காரங்களுக்கு தகுந்த மாதிரி மாறிடறாங்க...''

''அடி... நீ வேற. இப்ெபல்லாம், கட்சிக்காரங்க மட்டுமில்ல. சில ஆபீசர்களின் சொந்தக்காரங்க கூட, நிர்வாகத்துல தலையிடறாங்க. அப்டித்தான். நார்த் போலீஸ்ல இருக்க ஒரு பெரிய போலீஸ் ஆபீசரின் உறவுக்கார 'கறுப்பு கவுன்' அணிந்த ஒருவர் இருக்காராம்,''

''புகார் கொடுக்க வர்ற மக்களிடம் டீலிங் பண்றதுன்னு, பெரிய ஆபீசர் அவருக்கு, நிறைய ெஹல்ப் பண்றாராம். ஏற்கனவே, அந்த ஆபீசர் 'வெற்றி'கரமாக, 'வெல் செட்டில்டு' ஆயிட்டார்னு பேச்சு அடிபடுது. இப்ப இவரும் தன்னோட பங்குக்கு, வசூல் பண்ணி கொடுக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.

''ஊருக்கு வர்றப்ப 'சைலன்டா' இருக்காங்க. கொஞ்ச நாள் ஆச்சுன்னா, 'டெரர்' ஆகிடறாங்க்கா...'' சிரித்தாள் மித்ரா.''ஒற்றர் பிரிவுல இருக்க போலீஸ், அவங்க ஊருக்குள்ள நடக்கிற விஷயங்களை வேவு பாக்காம, வீட்டுக்குள்ள நடக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, குடும்பத்துக்குள்ளேயே கலாட்டா பண்றாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''யாருக்கா அது?''''திருமுருகநாத சுவாமி குடி கொண்டிருக்கிற ஊர்ல போலீஸ் ஸ்டேஷன்ல, ஒற்றர் பிரிவு போலீஸ்காரர் ஒருத்தரு, அங்க இருக்க பெரிய ஆபீசர்க்கும், ஒரு லேடி போலீசுக்கும் இடையே தவறான தகவலை பரப்பி விட்டு, ரெண்டு பேரோட பேரையும் ரொம்ப டேமேஜ் பண்ணிட்டாராம்,''

''அப்டி என்ன பண்ணாரு?'' துருவித்துருவி கேட்டாள் மித்ரா.

''மித்து, ஏற்கனவே ஸ்டே ஷன் ஆபீசர் மேல, ஒரு லேடி கம்ப்ளைன்ட் கொடுத்ததே இன்னும் முடியலே. இதுல, அதிகாரியோட மனைவிக்கும், அந்த லேடி போலீசுக்கும் இடையே கோள் மூட்டி பிரச்னை உண்டு பண்ணிட்டாரு,''

''இதனால, லேடி போலீஸ் குடியிருக்கிற வீட்டுக்கு வெளியே நின்று அதிகாரி மனைவி கண்டபடி பேச, பதிலுக்கு அவங்களும் பேச, ஏக களேபரம் ஆயிடுச்சாம். இந்த சண்டையை வேடிக்கை பார்த்த பொதுமக்களில் ஒருத்தர், கமிஷனர் வரைக் கும் சொல்லிட்டாராம்,''

''இத்தனைக்கும் அந்த ஆபீசருக்கு, ஊட்டிக்கு டிரான்ஸ்பர் போட்டும் கூட, லீவு போட்டுட்டு இங்கதான் இருக்காராம். இந்த பிரச்னையால, அவர் மேல இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் கெட்டுப்போச்சாம்,''

''இருக்காதா பின்ன. ஊருக்கெல்லாம் 'ராஜா'வாட்டம் பஞ்சாயத்து பண்ண அந்த ஆபீசர், சொந்த பிரச்னைய தீர்க்க முடியாம கஷ்டப்படறார் போல,'' என பேசி கொண்டிருந்த மித்ரா, அவ்வழியே சென்ற ஒருவரை பார்த்து, ''ஷியாம், எப்படி இருக்கீங்க. பாத்து ரொம்ப நாளாச்சு,'' என பேசினாள்.

அந்நபர் சென்றவுடன், ''அக்கா, இந்த மேட்டரில், 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லேன்னு,' நினைக்கிறேன்,'' என சிரித்த மித்ரா, ''போலி சி.எஸ்.ஆர்., என்.ஓ.சி., தயாரிச்ச விவகாரத்துல, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு தெரிய வந்திருக்கு,''

''உடனே ஆக்ஷன் எடுத்தா, டிபார்ட்மென்ட் மேல இருக்க இமேஜூம் போயிடும்னு, பெரிய ஆபீசர்ங்க கம்முன்னு இருக்காங்களாம். இதை சாதகமாக்கி, போலி டாக்குமென்ட் தயாரிக்க காரணமாக இருந்த போலீஸ்காரங்கள காப்பாத்த ஒரு குரூப் ஜரூரா முயற்சி பண்ணுதாம்,'' என்றாள்.

''இப்படி தப்பை, மூடி மறைக்கிறதால தான், தொடர்ந்து தப்பு நடந்துகிட்டே இருக்கு'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''சரியாத்தான் சொன்னீங்க. இதே மாதிரி ஒரு ஆபீசர் பண்ணின தப்பு சொல்றேன் கேளுங்க. போன வாரம் லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்துல சேவூரில், குட்கா லோடு லாரி ஒண்ணு வந்துருக்கு,''

''இதபத்தி, தெரிஞ்சுகிட்ட ஆபீசரோட ஜீப் டிரைவர், தகவல் சொல்லி, போலீசை வச்சு மடக்கி பிடிச்சுட்டாங்க. அதுக்கப்பறம், 'டீல்' பேசி, 'மேட்டரை' கலெக்ஷன் பண்ணிட்டு போக விட்டுட்டாங்களாம்,''

''இதுல என்ன ஒரு விசேஷம்னா, பெரிய ஆபீசருக்கு டிரைவராக உள்ளவரு, ஏழு வருஷத்துல, மூணு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் செஞ்சும், எங்கேயும் போகாம, ஒரே ஸ்டேஷன்ல, டிரைவராவே குப்பை கொட்டுறாராம்,'' என்றாள் மித்ரா.

''இந்த வேலைதான், அவருக்கு 'ஆனந்தமாக' இருக்குது போல. ஆபீசரோட அருளாசி இருக்கும்போது, அவருக்கு என்ன கவலை,'' என சித்ரா சிரித்தாள். அதற்குள் 'கவுன்டர்' வரவே, வரி கட்டி விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X