டில்லியில் பறவை காய்ச்சல் மூடப்பட்டது சஞ்சய் ஏரி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பகுதியான சஞ்சய் ஏரி மூடப்பட்டது. கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், பறவைக் காய்ச்சல் மிக வேமாக பரவி வருகிறது.மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், சமீபத்தில்

புதுடில்லி : டில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பகுதியான சஞ்சய் ஏரி மூடப்பட்டது.

கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், பறவைக் காய்ச்சல் மிக வேமாக பரவி வருகிறது.மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் இறந்துள்ளதற்கு, இந்த நோயே காரணம் என, தெரியவந்துள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சரணாலயத்தில், நேற்று முன்தினம், 215 பறவைகள் இறந்து கிடந்தன.

டில்லியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள மயூர் விஹார் பூங்கா, சஞ்சய் ஏரி மற்றும் துவாரகா பகுதிகளில், ஏராளமான பறவைகள் இறந்து கிடந்தன. பரிசோதனையில், அவற்றின் இறப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம் என, நேற்று காலை உறுதியானது.இதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து பறவைகளை இறக்குமதி செய்ய, மாநில அரசு தடை விதித்துள்ளது. காசிப்பூரில் உள்ள மொத்த கோழி சந்தை, தற்காலிகமாக மூடப்பட்டது. புகழ் பெற்ற சுற்றுலா தலமான சஞ்சய் ஏரி மூடப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X