பலாத்கார மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பலாத்கார மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை

Added : ஜன 12, 2021
Share
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், நத்தகயத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ஆசைதம்பி, 31; இவர், தன் உறவினரின், 14 வயது மகளை, 2018ல் பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமானார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பர்கூர் அனைத்து மகளிர் போலீசார், ஆசைதம்பி மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி, நேற்று தீர்ப்பளித்தார். ஆசைதம்பிக்கு,

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், நத்தகயத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ஆசைதம்பி, 31; இவர், தன் உறவினரின், 14 வயது மகளை, 2018ல் பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமானார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பர்கூர் அனைத்து மகளிர் போலீசார், ஆசைதம்பி மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி, நேற்று தீர்ப்பளித்தார். ஆசைதம்பிக்கு, 'போக்சோ' பிரிவில், 14 ஆண்டுகள், சிறுமியை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்ததற்கு, 10 ஆண்டுகள், பாலியல் பலாத்காரம் செய்ததற்கு, 14 ஆண்டுகள்.கொலை மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு என, மொத்தம், 39 ஆண்டுகள் சிறை, 61 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X