விருத்தாசலம் : கார் தீப்பிடித்து எரிந்ததில், பெண் நீதிபதியின் கணவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், மேட்டுக்காலனி பிரிவு சாலை அருகே, நேற்று மதியம், 1:00 மணியளவில், கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. 'சீட் பெல்ட்' அணிந்திருந்த நிலையில், டிரைவர் சீட்டில் இருந்தவர், உடல் கருகி இறந்து கிடந்தார். எரிந்தது, 'ஹூண்டாய் கிராண்ட் ஐ 10' கார் என்பதும், இறந்தவர், சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு, 36, என்பதும் தெரிந்தது.
கவியரசு மனைவி மணிமேகலை, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிகிறார். விருத்தாசலம், மணலுாரில், 4 வயது பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில், வசித்து வருகின்றனர்.மனைவியிடம் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற கவியரசு, காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி இறந்துள்ளார். காரில் தீப்பற்றியது எப்படி என, போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்தவர் படம் கேட்டுள்ளேன்... வந்ததும் அனுப்புகிறேன்...
கார் தீ விபத்தில் இறந்த வழக்கறிஞர் கவியரசு படம்...கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் கார் தீ பிடித்து எரிந்ததில் கருகி இறந்த கவியரசு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE