பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறக்க ரெடியா? மேலாண்மை குழு ஆய்வு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:மீண்டும் பள்ளிகள் திறக்கும்பட்சத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிசெய்யும் வகையில், பேரிடர் மேலாண்மை குழுவினர் பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தமிழகத்தில் வரும், 20 முதல் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை குழு சார்பிலும்

திருப்பூர்:மீண்டும் பள்ளிகள் திறக்கும்பட்சத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிசெய்யும் வகையில், பேரிடர் மேலாண்மை குழுவினர் பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தமிழகத்தில் வரும், 20 முதல் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை குழு சார்பிலும் அறிக்கை தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழுவினர் பள்ளிகள்தோறும், மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளனவா, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.இதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. பரிசீலித்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் விடுமுறைக்கு பின், 18, 19ம் தேதிகளில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் நேற்று முதல் துாய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X