திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தொலைபேசி வாயிலாக குறைகேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் வாசுகி தலைமை வகித்தார். பொதுமக்கள், தொலைபேசி வாயிலாக அழைத்து புகார்களை தெரிவித்தனர்.l மங்கலம் கிராமநீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கொடுத்த மனுவில், 'விவசாயிகள், விசைத்தறியாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, திருப்பூர் அல்லது பல்லடம் பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.l இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாவட்ட செயலாளர் மணிகண்டன் அளித்த மனுவில், 'திருப்பூர் குமரன் நினைவகத்தை மறைக்கும் வகையில், ஈ.வெ.ரா., - அண்ணா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குமரன் நினைவிடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என, உள்நோக்கத்துடன் சிலைகள் அமைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ள சிலைகளையும் அகற்ற வேண்டும்,' என கூறியுள்ளார்.l இந்திய மாணவர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. எனவே, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும், பாதுகாப்பு நெறிமுறையை பின்பற்றி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.முன்னதாக, வறுமையில் வாடும் தனிநபர்கள் குடும்ப மேம்பாட்டுக்காக, கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டது. இரண்டு பயனாளிகளுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகளை, கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE