திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இரு கோவிலில் உண்டியல்களிலும், மொத்தம் 10 லட்சத்து, 77 ஆயிரத்து 245 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி கமிஷனர் மேனகா, செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில், அலுவலர்கள், பக்தர்கள், காணிக்கை தொகையை எண்ணினர்.ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 5 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவற்றில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 623 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 10 கிராம் தங்கம்; 90 கிராம் வெள்ளியும் இருந்தது.ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், மூன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. அவற்றில், 5 லட்சத்து 35 ஆயிரத்து 622 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. 10 கிராம் தங்கம்; 42 கிராம் வெள்ளி பொருட்கள், காணிக்கை செலுத்தப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE