பெண்ணிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்தவர் கைது

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021
Share
குமுளி : கேரளா குமுளியில் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த ராஜிவை 35, கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காஞ்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜிவ் 35. இவர் குமுளியில் தனியார் தங்கும் விடுதியில் வேலை பார்த்தார். அருகில் வசித்த 24 வயதுடைய பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். சொந்தத் தொழில் செய்வதாகக்

குமுளி : கேரளா குமுளியில் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த ராஜிவை 35, கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் காஞ்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜிவ் 35. இவர் குமுளியில் தனியார் தங்கும் விடுதியில் வேலை பார்த்தார். அருகில் வசித்த 24 வயதுடைய பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். சொந்தத் தொழில் செய்வதாகக் கூறி ரூ. 27 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார். குமுளி எஸ்.ஐ., சஜிமோன் தலைமையிலான போலீசார் சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜிவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X