திண்டுக்கல் : 'நான்கு ஆண்டுகளில் 47 ஆயிரம் எக்டேர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது' என, திண்டுக்கல்லில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் இணை ஆணையருக்கான புதிய அலுவலக கட்டடத் திறப்பு விழாவில் அவர் கூறியது: மாநில அளவில் 11 மண்டலங்கள், 28 கோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் மண்டலத்திற்கு ஒரு இணை ஆணையர், கோட்டத்திற்கு ஒரு உதவி ஆணையர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.அறநிலையத்துறை உருவாக்கப்பட்டபோது 10 ஆயிரத்திற்கும் குறைவான கோயில்களே இருந்தன. தற்போது 40 ஆயிரம் கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த 47ஆயிரம் எக்டேர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE