மெஹபூபா கட்சி பிரமுகர் மீண்டும் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர் : நீதிமன்றத்தால் சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட, மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் பாராவை, குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மீண்டும் கைது செய்தனர். ஜம்மு -- காஷ்மீரில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவராக பதவி வகித்து வருபவர், வஹீத் பாரா. சமீபத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில்

ஸ்ரீநகர் : நீதிமன்றத்தால் சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட, மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் பாராவை, குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மீண்டும் கைது செய்தனர்.

ஜம்மு -- காஷ்மீரில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவராக பதவி வகித்து வருபவர், வஹீத் பாரா. சமீபத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன், இவர் தொடர்பில் இருந்ததாக கூறி, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர், கடந்த ஆண்டு, வஹீதை கைது செய்தனர்.

அவருக்கு, என்.ஐ.ஏ., நீதிமன்றம், கடந்த, 9ம் தேதி, ஜாமின் வழங்கியது. ஜம்மு மாவட்ட சிறையில் இருந்து, நேற்று வெளியே வந்த வஹீத் பாராவை, குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், மீண்டும் கைது செய்தனர்.அவர் மீது, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்குகளின் விபரம் வெளியிடப்படவில்லை.வஹீத் பாரா, பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக, முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.இவருக்கு, வருகிற, 18 வரை, போலீஸ் காவல் வழங்கி, ஜம்மு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X