சென்னை : பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும், 14ம்தேதி, சென்னை வருகிறார்.
பொங்கல் பண்டிகை தினமான, 14ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, டில்லியிலிருந்து விமானத்தில், சென்னை வருகிறார்.மாலை, 5:00 மணிக்கு, சென்னை அடுத்த மதுரவாயலில், தமிழக பா.ஜ., சார்பில் நடக்கும், 'நம்ம ஊரு பொங்கல்' விழாவில் பங்கேற்கிறார்.மாலை, 6:30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும், 'துக்ளக்' வார இதழ் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார். இரவு, 9:30 மணி விமானத்தில், டில்லி திரும்புகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE