அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜன., 27ல் சசிகலா விடுதலை? ஓசூர் ஓட்டலில் தங்க ஏற்பாடு!

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஓசூர் : பெங்களூரு சிறையில் இருந்து, சசிகலா, வரும், 27ல் விடுதலையாகும் சூழ்நிலையில், அன்றிரவு ஓசூரில் அவர் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த, நான்காண்டு சிறை தண்டனையை, 2017 பிப்.,ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மூவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்

ஓசூர் : பெங்களூரு சிறையில் இருந்து, சசிகலா, வரும், 27ல் விடுதலையாகும் சூழ்நிலையில், அன்றிரவு ஓசூரில் அவர் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த, நான்காண்டு சிறை தண்டனையை, 2017 பிப்.,ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மூவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர்.வரும், 27ல், சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றிரவு, தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியை வந்தடையும் அவருக்கு, வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

சசிகலா தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகுநேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், தங்க அதிக வாய்ப்புள்ளது.இதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள், ஓட்டல்களை, 'புக்கிங்' செய்து விட்டதாக உளவுப்பிரிவு போலீசார், அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும், அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிர் உள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர். எனவே, ஓசூரில் இரவு தங்கி, 28ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலுார் வழியாக, சசிகலா சென்னை செல்வதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X