பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் வனச்சரகரை தாக்கிய புலி: கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பந்தலுார்:கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கிராம பகுதியில், புலி தாக்கிய வனச்சரகர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.நீலகிரி எல்லையில், வயநாடு புல்பள்ளியில், சீதாகுன்னு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களில், 4 -வளர்ப்பு நாய்களை புலி பிடித்து சென்றுள்ளது. அங்கு வைக்கப்பட்ட, வனத்துறை கண்கானிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம்
 கிராமத்தில் வனச்சரகரை தாக்கிய புலி: கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு

பந்தலுார்:கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கிராம பகுதியில், புலி தாக்கிய வனச்சரகர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.நீலகிரி எல்லையில், வயநாடு புல்பள்ளியில், சீதாகுன்னு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களில், 4 -வளர்ப்பு நாய்களை புலி பிடித்து சென்றுள்ளது. அங்கு வைக்கப்பட்ட, வனத்துறை கண்கானிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சீதாகுன்னு குடியிருப்பு அருகே உள்ள புதரில் புலி இருப்பதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர்; போலீசார்; பொதுமக்கள் இணைந்து புலியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பாய்ந்த புலி, வனச்சரகர் சசிகுமார்,55, என்பவரின் முதுகு பகுதியில் தாக்கி வனப்பகுதிக்குள் ஓடியது. படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பகுதி, நீலகிரி எல்லையில் உள்ளதால், கேரள- தமிழக வனத்துறையினர், கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X